ரூ.56,100 சம்பளத்தில் விவசாய ஆராய்ச்சி மையத்தில் வேலை!

க்ரீட் வேளாண் அறிவியல் மையத்தில் நிரப்பப்பட உள்ள எஸ்எம்எஸ், சுருக்கெழுத்தாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ரூ.56,100 சம்பளத்தில் விவசாய ஆராய்ச்சி மையத்தில் வேலை!

அரியலுர் மாவட்டத்திலுள்ள க்ரீட் வேளாண் அறிவியல் மையத்தில் நிரப்பப்பட உள்ள எஸ்எம்எஸ், சுருக்கெழுத்தாளர் பணிக்கு கால்நடை அறிவியல் அல்லது விலங்கு அறிவியல் பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Subject Matter Specialist (SMS)

சம்பளம்: மாதம் ரூ.56,100

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: கால்நடை அறிவியல் அல்லது விலங்கு அறிவியல் பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ரூ.56,100 சம்பளத்தில் விவசாய ஆராய்ச்சி மையத்தில் வேலை!
‘ புராஜெக்ட் பணி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்’

பணி: சுருக்கெழுத்தாளர் (கிரேடு-III)

சம்பளம்: மாதம் ரூ.25,500

தகுதி: +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறனும் மற்றும் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 27-க்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை எஸ்பிஐ வங்கியில் CREED Krishi Vigyan Kendra என்ற பெயருக்கு உடையார்பாளையத்தில் மாற்றத்தக்க வகையில் வங்கி டிடியாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.kvkariyalur.org என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சுய சான்றொப்பம் செய்யபட்ட சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து The Chairman, ICAR - Krishi Vigyan Kendra, Cholamadevi Post, Jayankondam (via), Udayarpalayam Taluk, Ariyalur District – 612 902, Tamil Nadu என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 1.3.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com