
பல்நோக்கு மின் உற்பத்தி நிறுவனமான தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனில் காலியாக உள்ள எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.PLR/ET-2024/GATE/5/3
பணி மற்றும் இதர விவரங்கள்:
பணி: Executive Trainee
i. Mechanical -59
ii. Electrical - 58
iii. C&I - 15
iv. Civil - 39
v. IT - 3
vi. Chemical - 2
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 56,100 - 1,77,500
வயதுவரம்பு: 29 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி ஓபிசி பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி மற்றும் கேட்-2023 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்டி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.dvc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.7.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.