டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II இல்(குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகள்) உள்ள 2,327 பணியிடங்களுக்கான நேரடி நியமன தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II இல்(குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகள்) உள்ள 2,327 பணியிடங்களுக்கான நேரடி நியமன தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் ஜூலை 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழக அரசு துறைகளில் உள்ள  உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தனிப்பிரிவு அலுவலர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் என 507 குரூப் 2 பணியிடங்கள் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நேர்முக உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், மேற்பார்வையாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,820 குரூப் 2ஏ பணியிடங்கள் என 2,327 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் அதிகபட்சம் பொதுப் பிரிவினர் 32-க்குள்ளும், மற்ற பிரிவினர் 42-க்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை என்பது 1.7.2024 அன்றோ அல்லது தெரிவு செய்யப்படும் நாளன்றோ அல்லது நியமனம் செய்யப்படும் நாளன்றோ தேர்வர் 60 வயதை பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது.

மேலும் அதிகபட்ச வயது வரம்பு துணை வணிகவரி அலுவலர், வனவர் ஆகிய பதவிகளுக்கு பொருந்தாது.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் உயர்நிலை, மேல்நிலைப் படிப்பகளில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் வனவர் பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் உடற்திறன் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.முதல்நிலைத் தேர்வு கட்டணம் ரூ.100. முதன்மைத் தேர்வு கட்டணம் ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.7.2024

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள: 14.9.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com