மிஸ் பண்ணிடாதீங்க... பட்டதாரிகளுக்கு எஸ்பிஐ வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு!

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள 150 நிதியியல் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள 150 நிதியியல் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பவர்களிடம் இருந்து வரும் 27 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Trade Finance Officer(MMGS-II)

காலியிடங்கள்: 150

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஐஐபிஎப் கல்வி நிறுவன அங்கீகாரம் பெற்ற Forex சான்றிதழ் பெற்று Trade Financing துறையில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.12.2023 தேதியின்படி 23 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

(கோப்புப்படம்)
ஆண்டுக்கு ரூ.24 லட்சம் சம்பளத்தில் எஸ்பிஐ வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வு விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு ரூ.750. இதர பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bank.sbi/careers/current.openings என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.6.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com