எஸ்பிஐ வங்கியில் மேலாளர் வேலை வேண்டுமா?

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 50 மேலாளர் பணியிடங்களை நேர்முகத் தேர்வு மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கியில் மேலாளர் வேலை வேண்டுமா?

பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 50 மேலாளர் பணியிடங்களை நேர்முகத் தேர்வு மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளங்கலை, முதுகலை பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் 4 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர அறிவிப்பு எண்.CRPD/SCO/2023-24/33

பணி மற்றும் இதர விவரங்கள்:

பணி: Manager [Credit Analyst]

காலியிடங்கள்: 50

வயதுவரம்பு: 1.12.2023 தேதியின்படி 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

எஸ்பிஐ வங்கியில் மேலாளர் வேலை வேண்டுமா?
ஐசிஎம்ஆர்-இல் டெக்னிகல் அலுவலர் வேலை வேண்டுமா?

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று நிதியியல் பிரிவில் எம்பிஏ, சிஏ,சிஎப்ஏ,ஐசிடபுள்ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம் : 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு தகுதியனவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.750. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers என்ற இணையதள மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.3.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com