ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே பாதுகாப்புப் படை
ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) "ரயில்வே சொத்துகள் மற்றும் பயணிகள் பாதுகாப்பிற்காக "இந்திய நாடாளுமன்றத்தால் ரயில்வே பாதுகாப்புப் படை சட்டம் 1957 இல் இயற்றப்பட்டது. நாட்டின் பாதுகாப்புப் படைகளில் ரயில்வே பாதுகாப்புப் படையும் ஒன்றாகும். ரயில்வேயின் சொத்துக்கள் மற்றும் பயணிகளை பாதுகாப்பது இதன் பணியாகும். ரயில்வே பாதுகாப்புப் படையின் உயரதிகாரிகள் குடிமைப் பணித் தேர்வுகள் மூலம் பணியமர்த்தப்படுகிறார். ரயில்வே பாதுகாப்புப் படையில் கீழ்நிலை அதிகாரிகளுக்கான ஆட்சேர்ப்பு, அந்தப் படையால் நடத்தப்படும் தேர்வுகள் மூலம் நடத்தப்படுகிறது.

தற்போது ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 4660 உதவி காவல் ஆய்வாளர், காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து மே 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்: RPF 01/2024 & RPF 02/2024

பணி: Sub Inspector (SI)

காலியிடங்கள்: 452

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,400

பணி: Constable

காலியிடங்கள்: 4208

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் உடல் பரிசோதனை மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், சிறுபான்மையினர் அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.rrbchennai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.5.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com