டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்!

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு(நேர்முகத் தேர்வு பதவிகள்) அடங்கிய பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கான விண்ணப்பங்கள்
டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்!
Published on
Updated on
1 min read

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு(நேர்முகத் தேர்வு பதவிகள்) அடங்கிய பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

அறிவிப்பு எண்.7 / 2024

மொத்த காலியிடங்கள்: 118

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பதவி: கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குநர், அரசு சட்டக் கல்லூரிகள்

காலியிடங்கள்: 12

பதவி: மேலாளர் தரம்-III(சட்டம்)

காலியிடங்கள்: 2

பதவி: முதுநிலை மேலாளர் (சட்டம்)

காலியிடங்கள்: 9

பதவி: உதவி மேலாளர்(சட்டம்)

காலியிடங்கள்: 14

பதவி: உதவி மேலாளர்(சட்டம்)

காலியிடங்கள்: 2

பதவி: தமிழ் செய்தியாளர்

காலியிடங்கள்: 5

பதவி: ஆங்கில செய்தியாளர்

காலியிடங்கள்: 5

பதவி: கணக்கு அலுவலர் நிலை-III

காலியிடங்கள்: 1

பதவி: கணக்கு அலுவலர்

காலியிடங்கள்: 3

பதவி: உதவி மேலாளர்(கணக்கு)

காலியிடங்கள்: 20

பதவி: துணை மேலாளர்(கணக்கு)

காலியிடங்கள்: 1

பதவி: உதவி பொது மேலாளர் (நிதி)

காலியிடங்கள்: 1

பதவி: உதவி பொது மேலாளர்

காலியிடங்கள்: 1

பதவி: வேளாண்மை உதவி இயக்குநர்(விரிவாக்கம்)

காலியிடங்கள்: 6

பதவி: உதவி இயக்குநர்(புள்ளியியல்)

காலியிடங்கள்: 17

பதவி: உதவி இயக்குநர்(சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை)

காலியிடங்கள்: 3

பதவி: முதுநிலை உதவி இயக்குநர்(கொதிகலன்கள்)

காலியிடங்கள்: 4

பதவி: நிதியாளர்

காலியிடங்கள்: 6

பதவி: உதவி இயக்குநர்(னகர் மற்றும் ஊரமைப்பு)

காலியிடங்கள்: 4

பதவி: உதவி மேலாளர்(திட்டம்)

காலியிடங்கள்: 2

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 21 வயது பூர்த்தி அடைந்து 37 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகைகள் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தகுதி: ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்து தெரிந்துகொள்ளவும். செய்தியாளர் பதவிக்கு விண்ணப்பிப்போர் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு 2 தாள்களை கொண்டது.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: தேர்வுக் கட்டணச் சலுகை கோராத தேர்வர்கள் எழுத்துத் தேர்விற்கு கட்டணமாக ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.6.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com