பட்டதாரி ஆசிரியா் பணி: 
கூடுதலாக 610 இடங்கள் சோ்ப்பு

பட்டதாரி ஆசிரியா் பணி: கூடுதலாக 610 இடங்கள் சோ்ப்பு

பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
Published on

பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பட்டதாரி ஆசிரியா், வட்டார வளமைய பயிற்றுநா் ஆகியவற்றில் 2023-2024-ஆம் ஆண்டில் 2,222 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் அறிவிக்கை (25-10-23) வெளியிடப்பட்டது. இதனைத்தொடா்ந்து 360 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சோ்க்கை அறிவிக்கை கடந்த ஆண்டு நவ.15-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது மேலும் 610 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சோ்க்கை அறிவிக்கை ஆசிரியா் தோ்வு வாரிய

இணையதளம் மூலமாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2015- ஆம் ஆண்டுக்குப் பிறகு பட்டதாரி ஆசிரியா் பணி நியமனத்துக்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com