ராணுவ அதிகாரி பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள ராணுவ அதிகாரி பணியிடங்களுக்கான என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
யுபிஎஸ்சி
யுபிஎஸ்சி
Published on
Updated on
1 min read

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள ராணுவ அதிகாரி பணியிடங்களுக்கான என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.10/2024-NDA-II

தேர்வு பெயர்: National Defence Academy and Naval Academy Examination (II), 2024

மொத்த காலியிடங்கள்: 404

1. National Defence Academy (Army) – 208

2. National Defence Academy (Navy) – 42 Posts

3. National Defence Academy (Air Force)

i.Flying – 92

ii.Ground Duties (Tech) – 18

iii. Ground Duties (Non Tech) – 10

4. Naval Academy (10+2 Cadet Entry Scheme) -34

வயதுவரம்பு: 4.6.2024 தேதியின்படி கணக்கிடப்படும். 2.1.2006-க்கும் 1.1.2009-க்கும் இடைப்பட்ட தேதிகளில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: National Defence Academy (Army)-க்கு விண்ணப்பிப்போர் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Navy மற்றும் Air Force பணிக்கு விண்ணப்பிப்போர் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு பிளல் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் எஸ்எஸ்பி ஆல் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 1.9.2024

தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், புதுச்சேரி

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 2025

நேர்முகத் தேர்வி தேர்ச்சி பெறுவோருக்கு பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி தொடங்கப்படும் தேதி: 2.7.2025

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.6.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com