குரூப் 2, 2ஏ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2, 2ஏ பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
குரூப் 2, 2ஏ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Published on
Updated on
1 min read

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2, 2ஏ பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2, தேர்வு 2ஏ-க்கு தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

தமிழக அரசு துறைகளில் உள்ள துணைக் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், உதவி ஆணையர் (வணிகவரி), நில நிர்வாகத்தின் துணை தாசில்தார் உள்ளிட்ட பதவியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால(டிஎன்பிஎஸ்சி) தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது.

குரூப் 1, 2, 4 தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. அதன்படி குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9 ஆம் தேதியும்,

குரூப் 1 தேர்வு ஜூலை 13 ஆம் தேதியும், குரூப் 2, 2ஏ தேர்வுகள் செப்டம்பர் 28 ஆம் தேதியும் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், குரூப் -2, 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியுள்ளதாக, டிஎன்பிஎஸ்சிஅறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட தேர்வுக்கால அட்டவணை 24.4.2024 இல் வெளியிட்டபோது தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுா மற்றும் தேர்வுக்கு தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது

அதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுகள் முதன்மை எழுத்துத் தேர்விற்கான மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2ஏ-இன் முதன்மைத் புதிய பாடத்திட்டமும் https://www tnpsc.gov.in/English/syllabus.html என்ற தேர்வாணைய இணையதள பக்கத்திலும், தேர்வுத் திட்டம் https://www.tnpsc.gov.in/English/scheme.html என்ற தேர்வாணைய இணையதள பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் அவற்றை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com