மத்திய தொழிற்சாலையில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை

காரைக்குடியில் உள்ள மத்திய எலக்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
மத்திய தொழிற்சாலையில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை
Published on
Updated on
1 min read

காரைக்குடியில் உள்ள மத்திய எலக்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 6 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 01/2024

பணி: Technical Assistant

காலியிடங்கள்: 9

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400

தகுதி: Agriculture, Horticulture, Mathematics, Statics, Computer Science, Information Technology போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.cecri.res.in என்ற இணைதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுயசான்றொப்பம் செய்து அதனை இணைத்து வரும் 18.12.2024-க்குள் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் நகல்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Administrative Officer, CSIR-Central Electro Chemical Research Institute, Karaikudi-630 003, Tamilnadu

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.12.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com