ரெப்கோ வங்கியில் மேலாளர் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
repco
repco
Published on
Updated on
1 min read

ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து வரும் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Manager IT(Hardware & Networking

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ. 64,820 - 93,960

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது எம்சிஏ முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Manager IT(Software)

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.48,480 - 85,920

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எம்சிஏ போன்ற துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Manager(Legal)

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.48,480 - 85,920

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் அரசு விதிகளின்படி உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,200. இதனை "Repco Bank Recruitment Cell," Chennai என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.repcobank.com என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தோ, ஏ4 வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டு அதனுடன் தேவையான் அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Additional General Manager(Admin), Repco Bank Ltd, P.N.NO:1449, Repco Tower, No.33 North Usman Road, T.Nagar, Chennai-600 017

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 8.11.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com