தமிழக அரசில் உதவிப் பிரிவு அலுவலர் பணி: 15-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக அரசில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-தொகுதி 5ஏ பணிகளில் உள்ள உதவிப் பிரிவு அலுவலர் பதவிக்கு வரும் 15-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தமிழக அரசில் ஒருங்கிணைைந்த குடிமைப் பணிகள் தேர்வு-தொகுதி 5ஏ பணிகளில் உள்ள பதவிக்கு தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் பதவி வகிப்பவர்களை கொண்டு பணி மாறுதல் மூலமான நியமனத்திற்கு தகுதியானவர்களிடம் இருந்து நவ.15-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 698

அறிவிப்பு எண். 16/2024

பணி: உதவிப் பிரிவு அலுவலர்(Assistant Section Officer)

காலியிடங்கள்: 35

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 35-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் சலுகைகள் வழங்கப்படும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் தமிழக அரசின் ஏதாவதொரு துறையில் இளநிலை உதவியாளராக அல்லது உதவியாளராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாமையம் நடத்தும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.

எழுத்துத் தேர்வு 2025 ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறும். எழுத்துத் தேர்வில் பொது தமிழ், பொது ஆங்கிலம் பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் வரும் 15-ஆம் தேதிக்குள் www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.