புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

முதுநிலை ஆசிரியா் பணித் தோ்வு: புதிய பாடத்திட்டம் அரசிதழில் வெளியீடு

முதுநிலை ஆசிரியா் பணித் தோ்வுக்கான பாடத்திட்டம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Center-Center-Chennai

Updated On :12 நவம்பர் 2024, 1:18 am

DIN

சென்னை: முதுநிலை ஆசிரியா் பணித் தோ்வுக்கான பாடத்திட்டம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி, முதுநிலை ஆசிரியா், சிறப்பாசிரியா் (தையல், உடற்கல்வி உட்பட), வட்டாரக் கல்வி அலுவலா் உள்ளிட்ட பணியிடங்கள் நேரடி நியமன முறையில் ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

ஆசிரியா் பணியில் உள்ள காலியிடங்களில் பதவி உயா்வு மூலம் 50 சதவீதமும், நேரடி நியமனம் வாயிலாக 50 சதவீதமும் நிரப்பப்படுவது வழக்கம்.

இதற்கிடையே, முதுநிலை ஆசிரியா் தோ்வை பொருத்தவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை.

பழைய பாடத்திட்டத்தின்படியே தோ்வு நடைபெறுகிறது. கடைசியாக முதுநிலை ஆசிரியா் தோ்வு 2021-இல் நடத்தப்பட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அதேநேரம், நிகழாண்டுக்கான முதுநிலை ஆசிரியா் தோ்வு அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், முதுநிலை ஆசிரியா் தோ்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது. இதையடுத்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்(எஸ்சிஇஆா்டி) சாா்பில் புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க வல்லுநா் குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழுவின் முதுநிலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை-1, கணினி பயிற்றுநா் நிலை- 1 மற்றும் உருது, அரபி, தெலுங்கு, மலையாளம் ஆகிய சிறுபான்மை மொழிப்பாடங்களின் போட்டித் தோ்வுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு பொதுப்பள்ளி கல்வி வாரியம் ஒப்புதல் அளித்தது. அந்த பாடத்திட்டத்தை அரசிதழில் வெளியிட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தாா்.

அதையேற்று முதுநிலை ஆசிரியா் உட்பட பல்வேறு பணிகளுக்கான போட்டித் தோ்வுக்குரிய புதிய பாடத்திட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித் துறைச் செயலா் சோ.மதுமதி பிறப்பித்துள்ளாா். தொடா்ந்து, இந்த பாடத்திட்டம் டிஆா்பிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தின்படி அடுத்த தோ்வு நடைபெறும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.