தேசிய விதைகள் கழகத்தில் வேலை: ஐடிஐ, டிப்ளமே, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
கோப்புப்படம்

தேசிய விதைகள் கழகத்தில் வேலை: ஐடிஐ, டிப்ளமே, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

புதுதில்லியில் செயல்பட்டு தேசிய விதைகள் கழகத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on

புதுதில்லியில் செயல்பட்டு தேசிய விதைகள் கழகத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Trainee

பிரிவு: Agriculture

காலியிடங்கள்: 49

பிரிவு: Marketing

காலியிடங்கள்: 33

பிரிவு: Quality Control

காலியிடங்கள்: 11

தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு 60 சதவிகித மதிப்பெண்களுடன் விவசாய பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Agri Stores

காலியிடங்கள்: 19

தகுதி: விவசாய பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மாதம் ரூ. 24,616 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

பிரிவு: Stenographer

காலியிடங்கள்: 15

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் அலுவலக மேலாண்மை பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் எழுதி, அதை நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து மற்றும் கணினி தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஹிந்தி மொழியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Human Resources

காலியிடங்கள்: 16

தகுதி: ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருப்பதுடன் எம்எஸ் ஆபிஸ் படித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மாதம் ரூ. 24,616 வழங்கப்படும்.

பிரிவு: Accounts

காலியிடங்கள்: 8

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.காம் முடித்திருக்க வேண்டும்.

பிரிவு: Engineering Store

காலியிடங்கள்: 7

தகுதி: விவசாய பொறியியல், மெக்கானிக்கல் பாடத்தில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பிரிவு: Technician

காலியிடங்கள்: 21

தகுதி: பிட்டர், வெல்டர், ஆட்டோ எலக்ட்ரிசியன், டீசல் மெக்கானிக், பிளாக்சிமித் போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மாதம் ரூ. 24,616

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் சம்மந்தப்பட்ட பணிக்குரிய தொழிற்திறன் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு வரும் டிசம்பர் 22 ஆம் தேதி நடைபெறும். தேர்வு மையம் குறித்து விவரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.indiaseeds.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.11.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com