இந்திய ராணுவத்தில் வேலை: சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள லெப்டினன்ட் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் வேலை: சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Published on
Updated on
1 min read

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள லெப்டினன்ட் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சட்டம் முடித்த திருமணம் ஆகாத இருபாலர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: லெப்டினன்ட் (JAG Entry Scheme(35th Law Graduates Course))

காலியிடங்கள்: ஆண்கள்-4, பெண்கள்-4

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 21 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் எல்எல்பி முடித்து பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் முதுகலை சட்டப்படிப்பிற்கான(LLM)-CLAT-2024 நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த பணிக்கான நேர்முகத் தேர்வின் போது இளங்கலை சட்டப்படிப்பு சான்றிதழ்களுடன் பொதுச் சட்ட நுழைவுத் தேர்வு(சிஎல்ஏடி) நுழைவுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்பி நடத்தும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு பெங்களூரு, போபால், அகமதாபாத் ஆகிய இடங்களில் நடைபெறும். இது குறித்த விவரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் வைத்து 49 வாரம் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் 6 மாதம் இந்திய ராணுவத்தின் சட்டப்பிரிவில் பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி அக்டோபர் 2025 இல் ஆரம்பமாகும். பயிற்சிக்கு பின்னர் ராணுவ வழக்குரைஞராக பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.11.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com