
தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின்கீழ், திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் திருநெல்வேலி மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வெளிஆதார முறையில் நிரப்பப்பட உள்ள ஒப்பந்த அடிப்படையிலான சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் ஏதாவதொரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்போர் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தகுதியும் விருப்பமும் உள்ளோர் https://tirunelveli.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வரும் 10 ஆம் தேதிக்குள் மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம், மாவட்ட பூமாலை வணிக வளாகம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி மாவட்டம். என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்.9342682297 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் அல்லது அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.