இந்திய அமைச்சரவை செயலகத்தில் வேலை வேண்டுமா?

இந்திய அமைச்சரவை செயலகத்தில் காலியாக உள்ள துணை கள அலுவலர் (டெக்னிக்கல்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

இந்திய அமைச்சரவை செயலகத்தில் காலியாக உள்ள துணை கள அலுவலர் (டெக்னிக்கல்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.01/2024

பணி: Deputy Field Officer(Technical)

காலியிடங்கள்: 160

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவுகளில் இளங்கலை பட்டம் அல்லது அறிவியல் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். 2022, 2023,2024 ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://cabsec.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Post Bag No.001, Lodhi Road Head Post Office, New Delhi - 110 003

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 21.10.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com