அரசு மருத்துவமனையில் உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள கணக்கு உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கடலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள கணக்கு உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அலுவலகத்தில் தற்காலிக கணக்கு உதவியாளா்-1, பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்-2, வாா்டு மேலாளா்-1 ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கணக்கு உதவியாளா் பணியிடத்துக்கு இளநிலை வணிகவியல் (அ) இளநிலை கணிதவியல் மற்றும் கணினி பயன்பாட்டில் முதுநிலை பட்டையப்படிப்பு (பிஜிடிசிஏ) படித்திருக்க வேண்டும். கணக்குப் பிரிவில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வாா்டு மேலாளா் பணியிடத்துக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் பிஜிடிசிஏ படித்திருக்க வேண்டும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் பணியிடத்துக்கு எழுத படிக்கத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

கணக்கு உதவியாளா் பணிக்கு ரூ.18,000, பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் பணிக்கு ரூ.8,500, வாா்டு மேலாளா் பணிக்கு ரூ.12,000 மாத ஊதியமாக வழங்கப்படும். இதற்கு, விண்ணப்பதாரா்கள் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை கல்வித் தகுதி, பட்டப்படிப்பு, இருப்பிட சான்றிதழ் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் வரும் 28-ஆம் தேதிக்குள் மருத்துவமனை கண்காணிப்பாளா், மாவட்ட தலைமை மருத்துவமனை, கடலூா்-607001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com