ஹெவி இன்ஜினியரிங் நிறுவனத்தின் முன்னோடியாக விளங்கும் பிஇஎம்எல் நிறுவனம், பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் முன்னிலையில் உள்ளது. இந்த நிறுவனம் சுரங்கம் மற்றும் கட்டுமானம், ரயில் மற்றும் மெட்ரோ போன்ற வணிகத் துறைகளில் ஆண்டுக்கு சுமார் ரூ.4000 கோடி வருவாய் ஈட்டிவருகின்றது. இந்த நிறுவனத்தின் நாடு முழுவதும் அமைந்துள்ள அதன் பல்வேறு உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளில் காலியாக உள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 4 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ITI Trainees
துறைவாரியான காலியிடங்கள் விரம்:
1. Fitter - 7
2. Turner - 11
3. Machinist - 10
4. Electrrician - 8
5. Welder - 18
தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Office Assistant Trainee
காலியிடங்கள்: 46
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.16,900 - 60,650
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.bemlindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.9.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.