
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மேற்கு ரயில்வேயில் விளையாடடு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்: RRC/WR/01/2024
பணி: Sports Person(Sports Quota)(2024-25)
காலியிடங்கள்: 64
விளையாட்டுப் பிரிவுகள் வாரியாக காலியிடங்கள் விவரம்:
Athletics - 4
kabadi - 2
Body Building - 3
TableTennis - 2
Basket ball - 4
Weight Lifting - 4
Hand ball - 7
Wrestiling - 8
Kho - Kho - 5
Power Lifting - 1
Swimming - 2
Hockey - 8
Cycling - 5
Cricket - 7
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிளஸ் 2 தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
மேலும் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய, மாநில, பல்கலைக்கழக அளிவிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி குறைந்தது மூன்றாவது இடம் பெற்றிருக்க வேண்டும். இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்கள் பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.
சம்மந்தப்பட்ட விளையாட்டில் 1.4.2022 தேதிக்கு பின்னர் பெற்ற விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.
வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டுத் தகுதி மற்றும் விளைய்ட்டு சாதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள், சிறுபான்மையிருக்கு ரூ.250. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrc.wr.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.9.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.