பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில்(பாரத ஸ்டேட் வங்கி) நிரப்பப்பட உள்ள 1,497 சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்தும் வரும் அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CRPD/SCO/2024-25/15
பணி: Specialist Cadre Officer
மொத்த காலியிடங்கள்: 1,497
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy Manager(Systems)-Project Management & Delivery
காலியிடங்கள்: 187
பணி: Deputy Manager(Systems)-Infra Support & Cloud Operations
காலியிடங்கள்: 412
பணி: Deputy Manager(Systems)-Networking Operations
காலியிடங்கள்: 80
பணி: Deputy Manager(Systems)-IT Architect
காலியிடங்கள்: 27
பணி: Deputy Manager(Systems)-Information Security
காலியிடங்கள்: 7
சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மாதம் ரூ.64,820 - 93,960
பணி: Assistant Manager(System)
காலியிடங்கள்: 764
சம்பளம்: மாதம் ரூ.48,480 - 85,920
தகுதி: Computer Science, Computer Engineering, IT, Electronics, Communication, Software Engineering, Software Technology, Computer Application போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக், எம்.எஸ்சி அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்: துணை மேலாளர் பணிக்கு 4 ஆண்டுகளும், உதவி மேலாளர் பணிக்கு 2 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வுக் கட்டணம்: ரூ.750. இதனை எஸ்பி வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/web/careers/current-openings என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.10.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.