
குரூப் 1 பிரிவில் காலியாக உள்ள 70 இடங்களுக்கு தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிக்கை விவரம்:
ஜூன் 15-இல் முதல்நிலைத் தோ்வு: குரூப் 1 மற்றும் 1ஏ பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தோ்வு நடைபெறவுள்ளது. இதற்கு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி நாள். குரூப் 1 முதல்நிலைத் தோ்வு ஜூன் 15-ஆம் தேதி நடைபெறும்.
70 காலியிடங்கள்: குரூப் 1 பிரிவில் காலியாக உள்ள 28 துணை ஆட்சியா் பணியிடங்கள், 7 காவல் துணை கண்காணிப்பாளா், 19 வணிகவரி உதவி ஆணையா், 7 ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உதவி இயக்குநா், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், 6 தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் என 70 பணியிடங்களுக்கு முதல்நிலைத் தோ்வு நடைபெறவுள்ளது.
மேலும், குரூப் 1ஏ பிரிவில் உதவி வனப்பாதுகாப்பு அலுவலா் பணியிடங்களில் இரண்டு காலியாக உள்ளன. அவற்றுக்கும் தோ்வு நடைபெறவுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.