வங்கித் துறையில் வேலை வேண்டுமா? எக்ஸிம் வங்கியில் சூப்பர் வாய்ப்பு!

ஏற்றுமதி இறக்குமதி வங்கியான எக்ஸிம் வங்கியில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி, துணை மேலாளர் பணிக்கு 15 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வங்கித் துறையில் வேலை வேண்டுமா? எக்ஸிம் வங்கியில்  சூப்பர் வாய்ப்பு!
Published on
Updated on
1 min read

ஏற்றுமதி இறக்குமதி வங்கியான எக்ஸிம் வங்கியில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி, துணை மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். HRM/MT/DM/CM/2025-26/01

பணி: Management Trainee

1. Digital Technology

காலியிடங்கள்: 10

தகுதி : 60 சதவிகித மதிப்பெண்களுடன் Computer Science, Information Technology, Electronics and Communication பிரிவில் பிஇ அல்லது பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. Research Analysis

காலியிடங்கள்: 5

தகுதி : 60 சதவிகித மதிப்பெண்களுடன் பொருளாதார பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. Rajbhasha

காலியிடங்கள்: 2

தகுதி: Hindi/English பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

4. Legal

காலியிடங்கள்: 5

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் சட்டம், எல்எல்பி -இல் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 65,000

வயதுவரம்பு: மேற்கண்ட பணிகளுக்கான 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Deputy Manager

1. Legal

காலியிடங்கள்: 4

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் சட்டம், எல்எல்பி தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. Deputy Compliance Officer

காலியிடம்: 1

சம்பள: சம்பளம்: மாதம் ரூ. 48,480 - 85,920

தகுதி: ஐசிஎஸ்ஐ -இல் Associate Membership இருக்க வேண்டும். மேலும் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் எம்பிஏ, எல்எல்பி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

3. Chief Manager

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ. 85,920 - 1,05,280

தகுதி: ஐசிஎஸ்ஐ -இல் Asociate Membership ஆகவும், இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் எம்பிஏ, எல்எல்பி தேர்ச்சியும், 10 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

உச்ச வயது வரம்பில் எஸ்சி,எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்பபடும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது , ஓபிசி பிரிவினர் ரூ.600. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, இடபுள்யுஎஸ் மற்றும் பெண்களுக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.eximbankindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.4.2025

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com