
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் மே 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
பணி: குறைதீர்ப்பாளர்கள் (Ombudsperson)
காலியிடங்கள்: 23
மாவட்ட வாரியான காலியிடங்கள்:
அரியலூர் 1, காஞ்சிபுரம் 1, திருவள்ளூர் 1, கன்னியாகுமரி 1, தூத்துக்குடி 1, செங்கல்பட்டு 1, கோயம்புத்தூர் 1, மதுரை 1, ராமநாதபுரம் 1, சிவகங்கை 1, திருச்சி 1, கரூர் 1, தஞ்சாவூர் 1, மயிலாடுதுறை 1, திருவாரூர் 1, நாமக்கல் 1, சேலம் 1, திருப்பூர் 1, வேலூர் 1, திருப்பத்தூர் 1, திருவண்ணாமலை 1, தருமபுரி 1, கிருஷ்ணகிரி 1.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ஒரு அமர்வுக்கு ரூ.2,250 வழங்கப்படும். அதிகபட்சம் மாதம் ரூ.45,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Commissioner of Rural Development and Panchayat Raj, Saidapet, Panagal Building, Chennai – 600015”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 5.5.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.