
மத்திய அரசின் உயர்கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பான தொழிற்பயிற்சி வாரியத்தில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Administrative Accounts Officer
காலியிடம்: 1
வயது வரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100
தகுதி: ஏதாவதொரு துறையில் இரண்டாம் வகுப்பில் இளங்நிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் CA,ICWA,SAS தேர்ச்சியும், 5 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Director of Training
காலியிடம்: 1
வயது வரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100
தகுதி: பொறியியல், டெக்னாலஜி துறையில் ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களிலும் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, Board of Apprenticeship Training (SR), Taramani, Chennai
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 18.8.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.