
மைசூரில் செயல்பட்டு டிஆர்டிஓ-இன் தற்காப்பு உயிரியல் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். DIBT/HRD/APPR-01/2025-26
பயிற்சியின் பெயர்: Diploma Apprentice
காலியிடங்கள்: 8
1. Mechanical - 4
2. Electrical - 4
தகுதி : Mechanical /Electrical பாடப்பிரிவில் டிப் ளமோ எஞ்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பயிற்சியின் பெயர்: Trade Apprentice
காலியிடங்கள்: 12
1. Machinist - 5
2. Fitter- 3
3. Electrician - 4
தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சியின் போது ஐடிஐ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.7,000 மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8,000 வழங்கப்படும்.
மேற்கண்ட அனைத்து பயிற்சிகளுக்கும் 2023-க்கு பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: மேற்கண்ட இரண்டு பயிற்சிகளுக்கும் 31.7.2025 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ, டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்காக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இது பற்றிய விபரங்கள் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப் படும்.
விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட அப்ரண்டிஸ் பயிற்சியில் சேர டிப்ளமோ முடித்தவர்கள் தங்களுடைய கல்வித்தகுதி பற்றிய விபரங்களை www.nats. education.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளவும். அதேபோல ITI முடித்தவர்கள் www.apprenticeshipindia.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளவும். பின்னர் அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படும் நிறுவனங்களின் பட்டியலிலிருந்து DRDO நிறுவனத்தை தேர்வு செய்து, DRDO இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.8.2025
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.