
புதுதில்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தில் (டிஆர்டிஓ) சயின்டிஸ்ட் , பொறியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் , அறிவியல் பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 156
பணி: Scientist, Engineer (B)
காலியிடங்கள்: 152
வயது வரம்பு: 4.7.2025 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு மத்திய அரசு விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் இசிஇ, சிஎஸ்இ, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மெட்டீரியல் சயின்ஸ் & இன்ஜினியரிங், மெட்டலர்ஜிகல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ருமென்ட் இன்ஜினியரிங், சுற்றுச்சூழல் இன்ஜினியரிங் போன்ற பிரிவுகள் ஏதாவதொன்றில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது Life Science பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் முதல் வகுப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உயிரி மருத்துவப் பொறியியல், தொழில்நுட்பம், உயிரி மருத்துவ மின்னணுவியல், உயிரி மருத்துவ கருவி பொறியியல், உயிரி மின்னணுவியல், மருத்துவ டிரானிக்ஸ் பொறியியல், மின்னணுவியல் மற்றும் உயிரி மருத்துவப் பொறியியல், உயிரி மருத்துவம் மற்றும் ரோபாட்டிக்ஸ் பொறியியல், உளவியல், பயன்பாட்டு உளவியல், மருத்துவ உளவியல், ஆலோசனை, சுகாதார உளவியல், ராணுவ உளவியல், அறிவாற்றல் உளவியல், உளவியல் (நிறுவன நடத்தை), உடலியல் உளவியல், அசாதாரண உளவியல், சமூக உளவியல், கல்வி உளவியல், தொழில்துறை உளவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல், வளிமண்டல அறிவியல், கடற்படை கட்டடக்கலை அறிவியல் போன்ற ஏதாவதொரு பாடத்தில் முதல் வகுப்பு முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அனைத்து விண்ணப்பதாரர்களும் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் கேட் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: 2023, 2024, 2025 இல் நடைபெற்ற கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் டிஆர்டிஓ நடத்தும் நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். நேர்முகத்தேர்விற்கு வரும்போது அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வரவும். தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 மட்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.rac.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.8.2025
தகுதி பெற்றிருக்க வேண்டிய முக்கிய பாடப்பிரிவுகள், அதற்கு இணையான பாடப்பிரிவுகள், பாட வாரியாக ஏற்பட்டுள்ள காலியிட விபரம், காலியிட பகிர்வு விபரம் மற்றும் எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்ட விபரம் ஆகியவை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து தெரிந்துகொள்ளவும்.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.