
பரோடா வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான எஸ்சி,எஸ்டி,ஓபிசி பிரிவினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.: BOB/HRM/REC/ADVT/2025/10
மொத்த காலியிடங்கள்: 125
பணி: Manager - Forex Acquisition & Relation-ship
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.93,960
தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் நிதியியல் துறையில் முதுநிலைப்பட்டம் தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சிஏ, சிஎம்ஏ, சிஎஸ், சிஎப்ஏ போன்ற ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 24 முதல் 34-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Senior Manager - Forex Acquisition & Relationship
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ. 1,05,280
தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் நிதியியல் துறையில் முதுநிலைப் பட்டம், முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி அல்லது சிஏ, சிஎம்ஏ, சிஎஸ், சிஎப்ஏ போன்ற ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27 முதல் 37-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Manager Credit Analyst
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ. 93,960
தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன்நிதியியல் துறையில் முதுநிலைப் பட்டம், முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி அல்லது சிஏ, சிஎம்ஏ, சிஎஸ், சிஎப்ஏ போன்ற ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 25 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Manager-Digital Fraud
காலியிடங்கள்: 3
வயது வரம்பு: 24 முதல் 34-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 93,960
தகுதி : கணினி அறிவியல், ஐடி, டேட்டா அறிவியல் பிரிவில் முதுநிலை, எம்சிஏ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Manager-Security
காலியிடங்கள் : 10
சம்பளம்: மாதம் ரூ. 93,960
தகுதி : ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய ஏதாவதொன்றில் 5 ஆண்டு அலுவலர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 23 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும். .
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.850. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, இஎஸ்எம் மற்றும் பெண்களுக்கு ரூ.175. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.8.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.