வன்கொடுமை வழிகாட்டி மையத்தில் பணி: விண்ணப்பிக்க செப்.4 கடைசி நாள்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் வரும் செப்.4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாகவுள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூா்த்தி செய்யப்படவுள்ளது.

எனவே அக்காலிப்பணியிடங்களுக்கென குறிப்பிட்டுள்ள கல்வி மற்றும் இதர தகுதிகள் உள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.காலிப் பணியிடங்கள் குறித்த விபரம் மற்றும் விண்ணப்படிவத்தினை https://kancheepuram.nic.in இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக பழைய கட்டடம், முதல் தளம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு வரும் செப்.4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

DEPARTMENT OF SOCIAL WELFARE & WOMEN EMPOWERMENT ONE STOP CENTRE KANCHIPURAM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com