இந்திய ராணுவத்தில் வேலை: சட்டம் படித்தவர்களுக்கு வாய்ப்பு!

இந்திய ராணுவத்தில் வழக்குரைஞராக பணிபுரிய சட்டம் படித்த திருமணமாகாத ஆண், பெண் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

இந்திய ராணுவத்தில் வழக்குரைஞராக பணிபுரிய சட்டம் படித்த திருமணமாகாத ஆண், பெண் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: JAG Entry Scheme (123rd)

காலியிடங்கள்: ஆண்கள் 5, பெண்கள் 5

வயது வரம்பு: 1.1.2026 தேதியின்படி 21 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி : குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் எல்எல்பி முடித்து பதிவி செய்திருக்க வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் முதுநிலை சட்டப்படிப்பிற்கான (எல்எல்எம்) - கிலாட்- 2025 நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கான நேர்முகத்தேர்வின் போது இளநிலை சட்டப்படிப்பு சான்றிதழ்களுடன் கிளாட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின் போது உதவித்தொகையாக மாதம் ரூ.56,100 வழங்கப்படும். பின்னர் ராணுவ விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்பி நடத்தும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள்: பெங்களூரு, போபால், அகமதாபாத். நேர்முகத் தேர்வு குறித்த விபரம் சம்மந்தப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் வைத்து 49 வாரம் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் 6 மாத காலம் இந்திய ராணுவத்தின் சட்டப்பிரிவில் பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி 2026 ஏப்ரல் மாதம் ஆரம்பமாகும். பயிற்சிக்கு பின்னர் ராணுவத்தில் வழக்குரைஞராக பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.9.2025

Summary

Indian Army Recruitment 2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com