

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள 362 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் இதர விவரங்கள்:
பணி: எம்.டி.எஸ் (Multi-Tasking Staff)
காலியிடங்கள் விவரம்: தில்லி 108, இடாநகர் 25, மும்பை 22, ஸ்ரீநகர் 14, திருவனந்தபுரம் 13, லக்னௌ 12, போபால் 11, ஆமதாபாத் 11, சென்னை 10 உள்பட மொத்தம் 362 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 14.12.2025 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.mha.gov.in www.ncs.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ. 550, இதர பிரிவினருக்கு ரூ. 650. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள்: 14.12.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.