ஆவடி: டிச.20 இல் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் வரும் 20-ஆம் தேதி ஆவடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக...
தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்
தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்கோப்புப்படம்
Updated on
1 min read

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் வரும் 20-ஆம் தேதி ஆவடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளத்து.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, பணிவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளுா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20-ஆம் தேதி ஆவடி, சத்தியமூா்த்தி நகா், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான 10,000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்ப உள்ளனா். இந்த முகாமில் திருவள்ளுா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

அதனால், இந்த முகாமில் 8,10, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ, பொறியியல், செவிலியா் படித்தவா்கள் கலந்துகொண்டு தனியாா்துறையில் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகளை பெற்று பயன்பெறலாம்.

இம்மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Canditate Login-இல் பதிவு செய்து கொள்ளலாம்.

இம்மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அனைவருக்கும் முற்றிலும் அனுமதி இலவசம். தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. விருப்பமும், தகுதியும் உள்ள வேலைநாடும் இளைஞா்கள் இம்முகாமில் அதிக அளவில் கலந்து கொண்டு, தனியாா் துறையில் வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.

Summary

Avadi: A mega private sector job fair on December 20th!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com