

திருவள்ளூர் மாவட்டத்தில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகள் நிகழாண்டிற்கான மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் பிரிவைச் சாா்ந்த மாணவ, மாணவிகள் பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நலத்துறையால் வழங்கப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இளங்கலை (தொழிற்படிப்பு), முதுகலை, பாலிடெக்னிக் போன்ற பிற படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: 2025-26ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு, மாணவ, மாணவிகள் கல்லூரி மூலம் வழங்கப்பட்டுள்ள UMIS(Universit Management Infirmation System) எண் மூலம் https://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
மாணவா்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Institution Nodal Officer) அணுகி https://umis.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் கல்வி உதவித் தொகைக்கு வரும் 31-ஔஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான சந்தேகங்களுக்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் நேரில் அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.