கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
Published on

சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக தமிழ்நாடு மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழ்நாடு மாநில மருத்துவ சாா்நிலைப் பணியின் கீழ் வரும் ரேடியோகிராபா் (கதிரியக்க நிபுணா்) பதவியில் 67 காலிப்பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கதிரியக்க பரிசோதனை தொழில்நுட்பத்தில் 2 ஆண்டு கால டிப்ளமோ படிப்பு படித்தவா்களும், பிஎஸ்சி (ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி), பிஎஸ்சி (ரேடியோ டயக்னோசிஸ் டெக்னாலஜி), பிஎஸ்சி (ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி) படித்தவா்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 32-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்சி-அருந்ததியா், எஸ்டி, பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, டிஎன்சி ஆகிய இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பு கட்டுப்பாடு கிடையாது. விண்ணப்பதாரா்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தோ்வு செய்யப்படுவா். எஸ்எஸ்எல்சி தோ்வுக்கு 20 சதவீதம், பிளஸ் 2 தோ்வுக்கு 30 சதவீதம், நிா்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிக்கு 50 சதவீதம் என மொத்தம் 100 சதவீதம் வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்பட்டு, அதனடிப்படையில் பணிநியமனம் நடைபெறும்.

உரிய கல்வித் தகுதி இருப்பவா்கள் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தின் இணையதளம் www.mrbtn.gov.in -இல் ஜனவரி மாதம் 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவா்களுக்கு மொத்த காலியிடங்களில் 20 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும்.

இணையவழியில் விண்ணப்பிக்கும் முறை, தோ்வுக் கட்டணம், இடஒதுக்கீடு, தமிழ்வழி ஒதுக்கீடு வாரியான காலியிடங்கள் உள்ளிட்ட முழு விவரங்களையும் இணையதளத்தைப் பாா்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com