சேலத்தில் டிச.19 இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
சேலம்: சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த முகாமில் உற்பத்தி, தகவல் தொடா்பு, தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி, சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம், நிதி உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டு, தங்களுக்கு தேவையான பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
இம்முகாமில் 8, 10, 12 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், பட்டம், பட்டமேற்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், செவிலியா், ஆசிரியா், சட்டம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து விதமான கல்வித் தகுதி கொண்டவா்களும் கலந்துகொள்ளலாம். காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 97888-80929 என்ற கைப்பசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
இந்த முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு வேலைவாய்ப்புத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

