

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் (சிபிஎஸ்இ) காலியாக உள்ள குரூப் ஏ, பி மற்றும் சி காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுயானவர்களிடம் இருந்து டிச.22-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள்: 124
குரூப் ஏ பணிகள்
பணி: உதவி செயலர் (Assistant Secretary)– 8
பணி: உதவி பேராசிரியர் (Assistant Professor & Assistant Director (Academics)) – 12
பணி: உதவி பேராசிரியர் (Assistant Professor & Assistant Director (Training)) – 8
பணி: உதவி பேராசிரியர்(Assistant Professor & Assistant Director (Skill Education)) – 7
பணி: கணக்கு அலுவர் (Accounts Officer) – 2
குரூப் பி பணிகள்
பணி: சூப்ரென்டன்ட்(Superintendent) – 27
பணி: இளநிலை மொழிப்பெயர்ப்பு அலுவலர்(Junior Translation Officer) – 9
குரூப் சி பணிகள்
பணி: இளநிலை கணக்காளர்(Junior Accountant) – 16
பணி: இளநிலை உதவியாளர்(Junior Assistant) – 35
தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு தனித்தனியான தகுதிகள், அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக பிளஸ் 2, கணியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தட்டச்சு செய்ய தெரிந்தவர்கள், இளநிலை, முதுநிலை, பி.எட்., எம்.எட்., முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தெளிவான விரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
வயது வரம்பு: 22.12.2025 தேதியின்ன் படி 27, 30, 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.cbse.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: குரூப் ஏ பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் பிரிவினருக்கு ரூ. 250. இதர அனைத்து பிரிவினரும் ரூ. 1750 செலுத்த வேண்டும். குரூப் பி மற்றும் சி பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் பிரிவினருக்கு ரூ. 250. இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.1050. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.12.2025
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.