மத்திய வருவாய் மற்றும் நிதியமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுங்கத்துறையின் சென்னை அலுவலகத்தில் காலியாக உள்ள சமையல்காரர், சமையல்காரர் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய வருவாய் மற்றும் நிதியமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கஸ்டம்ஸ் எனப்படும் சுங்கத்துறைக்கான அலுவலகங்கள் அனைத்து மாநிலங்களிலும் உள்ள முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. நாட்டில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்களில் சுங்கவரி கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது சுங்க அலுவலர்களின் முக்கிய பணியாகும்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் சென்னை சுங்க அலுவலகத்தில் சமையல்காரர், சமையல்காரர் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: HALWAI CUM-COOK - 1
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கேட்டரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ASSISTANT HALWAI CUM-COOK - 1
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கேட்டரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 31.12.2025 தேதியின்படி 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்ம். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் திறன் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஏ4 வெள்ளைத்தாளில் விண்ணப்பங்களை தயார் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
THE ADDITIONAL COMMISSIONER OF CUSTOMS (ESTABLISHMENT) OFFICE OF THE COMMISSIONER OF CUSTOMS (GENERAL) CUSTOM HOUSE, NO. 60, RAJAJI SALAI, CHENNAI - 600 001
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பப் படிவத்தை பார்ப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்.
Summary
Chennai Custom House – Recruitment of Halwai Cum Cook and Assistant Halwai Cum Cook the Departmental Canteen Functioning in Chennai Customs House
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |

சென்னையைக் குளிர்வித்த பலத்த மழை!

தலைநகரில் மக்கள்தொகைக்கான இணையவழி சுய-கணக்கெடுப்பு தொடக்கம்!

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுவோருக்கு பணி ஒதுக்கீடு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

