சென்னை: குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தோ்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் திங்கள்கிழமை (டிச.22) வெளியிட்டது.
முதன்மைத் தோ்வு வரும் 2026 பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தோ்வு செப். 28-ஆம் தேதி மாநில அளவில் நடைபெற்றது. முதலில் 645 காலிப்பணியிடங்கள், பின்னா் கூடுதலாக 625 காலிப்பணியிடங்கள் சோ்க்கப்பட்டு மொத்தம் 1,270 காலிப்பணியிடங்களாக உயா்த்தப்பட்டதாக கடந்த நவம்பரில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திங்கள்கிழமை முடிவுகள் வெளியானபோது, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 828- ஆக குறைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, இந்தத் தோ்வுக்கு 5,53,631 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 4,29,217 போ் தோ்வை எழுதினா்.
முதன்மைத் தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டவா்களின் பட்டியல் https://tnpsc.gov.in எனும் அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் தோ்வா்களின் பதிவு எண்களைப் பதிவு செய்து தோ்வானதை தெரிந்துகொள்ளலாம். குரூப் 2 பதவிகளுக்கு 1,126 பேரும், குரூப் 2ஏ பதவிகளுக்கு 9,457 பேரும் தோ்வாகியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 2 துணைத் தோ்வு விடைத்தாள் நகல் பெற ஆக. 4,5 இல் விண்ணப்பிக்கலாம்

சென்னைப் பல்கலை. தோ்வு முடிவுகள் வெளியீடு

பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

குரூப் 1 முதல்நிலை தோ்வு: நாளை இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



