விண்ணப்பித்துவிட்டீர்களா..? கடலோர காவல் படையில் குரூப் 'சி' பணிகள்!

கடலோர காவல்படையில் காலியாக உள்ள குரூப் 'சி' பணியிடங்கள் தொடர்பாக...
இந்திய கடலோர காவல்படை
இந்திய கடலோர காவல்படை
Updated on
2 min read

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கான தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: ஸ்டோர் கீப்பர் கிரேடு-2 (Store Keeper Grade-II)

காலியிடஙகள்: 1

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: இன்ஜின் ஓட்டுநர்(Engine Driver)

காலியிடங்கள்: 3

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இன்ஜின் ஓட்டுநர் பணிக்கான சான்றிதழை பெற்றவராகவும், 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: லஸ்கர்(Lascar)

காலியிடங்கள்: 2

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: மோட்டார் வாகன ஓட்டுநர்(Civilian Motor Transport Driver (Ordinary Grade))

காலியிடங்கள்: 3

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகன பழுதுபார்த்தல் குறித்து தெரிந்திருந்க்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: பியூன் (ஜெஸ்ட்னர் ஆபரேட்டர்):

காலியிடங்கள்: 4

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: வெல்டர் (செமி ஸ்கில்டு)

காலியிடங்கள்: 1

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மேற்கண்ட பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி,எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.indiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் அல்லது தயார் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Commander Coast Guard Region (East)

Near Napier Bridge

Fort St George (PO)

Chennai - 600 006

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 29.12.2025.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Indian Coast Guard invites applications in the prescribed format as given at Annexure-I from eligible Indian citizens for filling up the following vacancies by Direct Recruitment

இந்திய கடலோர காவல்படை
வாய்ப்பை நழுவ விடாதீர்கள்... ரயில்வேயில் 22 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com