வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க.. ரூ.1,40,000 சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலை!

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(பெல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புரபேஷனரி பொறியாளர் பணி
வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க.. ரூ.1,40,000 சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலை!
Published on
Updated on
1 min read

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(பெல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புரபேஷனரி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 17556/HR/All India/2025

பணி: Probationary Engineer

காலியிடங்கள்: 200

சம்பளம்: மாதம் ரூ. 40,000- 1,40,000

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Probationary Engineer

காலியிடங்கள்: 150

சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 25-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி எஸ்டி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.1000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலியில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து, அதனை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.1.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com