வங்கிகளில் 1,007 சிறப்பு அதிகாரிகள் வேலை: ஐ.பி.பி.எஸ் அறிவிப்பு

வங்கி வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இருபாலர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

வங்கி பணியாளா் தோ்வாணையம் (ஐபிபிஎஸ்) மூலம் பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, இந்திய மத்திய வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, யூகோ வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா என நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் 2026 - 27 ஆம் ஆண்டிற்கான ஐடி அலுவலர், வேளாண் கள அலுவலர், ராஜ்பாஷா அலுவலர், சட்ட அலுவலர், மனிதவளம்,பணியாளர் அலுவலர், சந்தைப்படுத்தல் அலுவலர் என 1,007 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான முதல்நிலைத் தோ்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறுகின்றன. முதன்மைத் தோ்வு அக்டோர், நவம்பர் மாதங்களில் நடக்கிறது. இதற்கு, தகுதியான வங்கி வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இருபாலர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து விவரம்:

பணி: IT Officer (Scale I)

பணி: Agricultural Field Officer (Scale I)

பணி: Rajbhasha Adhikari (Scale I)

பணி: Law Officer (Scale I)

பணி: HR/Personnel Officer (Scale I)

பணி: Marketing Officer (Scale I)

மொத்த காலியிடங்கள்: 1,007

சம்பளம்: மாதம் ரூ.48,480 - 85,920

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்வித்தகுதியில் 65 சதவிகிதத்துக்கும் குறையாமல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 21.7.2025 தேதியின்படி 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வுக் கட்டணம்: ரூ.850. எஸ்டி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.175 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

முதல்நிலைத் தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர்,ராமநாதபுரம், திருநெல்வேலி, நாகர்கோவில்,கன்னியாகுமரி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருச்சி, கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், தருமபுரி ஆகிய நகரங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.7.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Applications are invited from eligible and interested candidates aspiring to join any of the Participating Public Sector Banks listed at (A) as Specialist Officers. The candidates are required to register for the Common Recruitment Process (CRP SPL-XV) for vacancies of 2026-27.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com