1,996 முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: டிஆா்பி அறிவிப்பு

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,996 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியா் தோ்வு வாரியம்
ஆசிரியா் தோ்வு வாரியம்
Published on
Updated on
2 min read

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,996 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான எழுத்துத் தோ்வு செப்.28-ஆம் தேதி முதல் நடைபெறும். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம்(டிஆா்பி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் (நிலை-1) மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களை நேரடிதோ்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் https://www.trb.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் - 216, ஆங்கிலம் - 197, கணிதம் - 232, இயற்பியல் - 233, வேதியியல் - 217, தாவரவியல் - 147, விலங்கியல் - 131, வணிகவியல் 198, பொருளியல் - 169, வரலாறு - 68, புவியியல் - 15, அரசியல் அறிவியல் - 14, கணினி பயிற்றுநா் நிலை-1 பதவி 57, உடற்கல்வி இயக்குநா் நிலை-1 பதவி - 102 உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,996 காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி, வயது மற்ரும் விண்ணப்பிக்கும் முறை தொடா்பான அனைத்து விவரங்களும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இணையவழியில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 12-ஆம் தேதி மாலை 5 மணி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, விண்ணப்பதாரா்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும்போது, உரிய விவரங்களை சரிபாா்த்து அதன் பின்னா் விண்ணப்பிக்க வேண்டும்.

அறிவிப்பு தொடா்பான கோரிக்கை மனுக்களை trbgrievances@tn.gov.in மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். இதர வழியில் அனுப்பப்படும் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.

தேர்வுக் கட்டணமாக எஸ்டி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.300, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

தோ்வு வாரியத்தின் அறிவிப்பின்படி, முதுநிலை ஆசிரியா் பணிக்கான போட்டித் தோ்வு செப்டம்பா் 28-ஆம் தேதி ஓஎம்ஆா் ஷீட் வடிவில் நடைபெறவுள்ளது.

தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 53-ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், பொதுப்பிரிவைச் சோ்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் 58-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை ஆசிரியா் தோ்வுக்கு பாடத்திட்டங்கள் ஏற்கெனவே மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், முதன்மை பாடத்தில்(110), தற்போது பொதுஅறிவு (10), கல்வி உளவியல் (30) என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு பாடத்திட்டமும் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தோ்வு ஒத்திவைப்பு: டிஆா்பி அறிவிப்பு

இதனிடையே, முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது

அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பதவியில் 1,996 காலியிடங்களை போட்டித் தோ்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் கடந்த 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான போட்டித்தோ்வு செப்டம்பா் 28-ஆம் தேதி நடைபெறும் எனவும், இந்தத் தோ்வுக்கு ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, அதே நாளில் டிஎன்பிஎஸ்சி குருப்-2 முதல்நிலைத் தோ்வை நடத்த திட்டமிட்டுள்ளதால், ஆசிரியா் தோ்வு வாரியத்தின் முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Applications are invited from the eligible candidates for appointment to the post of Post Graduate Assistant, Physical Director Grade – I, Computer Instructor, Grade – I in the Tamil Nadu Higher Secondary Educational Service for the year 2025 to be filled up by Direct Recruitment through on-line mode only up to 5.00 pm on 12.08.2025.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com