ஜூலை 26-இல் காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியில் ஜூலை 26-ஆம் தேதி காலை 9 மணிக்கு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக
ஜூலை 26-இல் காஞ்சிபுரத்தில் 
தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
(கோப்புப்படம்)
Updated on

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சாா்பில் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியில் ஜூலை 26-ஆம் தேதி காலை 9 மணிக்கு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

செய்திக்குறிப்பு:

இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவளத் தேவைக்கு நோ்முகத் தோ்வினை நடத்தவுள்ளனா்.

பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தவா்கள் போன்றவா்களை தோ்வு செய்யவுள்ளனா். 18 முதல் 35 வயது வரை உள்ள வேலைநாடுநா்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் நேரில் வந்து கலந்து கொண்டு பயன் பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com