மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் படித்தவர்களுக்கு வேலை!

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை துறையில் காலியாக உள்ள இடி செயலர்-1 பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
செவிலியர்
செவிலியர்
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை துறையில் காலியாக உள்ள இடி செயலர்-1 பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 11 மாத ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விபரம் வருமாறு:

பணி: ED Secretary

காலியிடம் : 1

சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி: நர்சிங் பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி முடித்திருப்பதுடன் கணினியில் பணிபுரிவது குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர் முழு விபரம் அடங்கிய விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

முதல்வர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர்.

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 5.8.2025

மேலும் கூடுதல் விபரங்க www.thanjavur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Summary

An employment notification has been published for the vacant post of ED Secretary-1 in the Emergency Department of Thanjavur Government Medical College Hospital.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com