கார்டன் ரீச் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ் லிமிடெட்
கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ் லிமிடெட்
Published on
Updated on
1 min read

கொல்கத்தாவில் உள்ள இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு கப்பல் கட்டும் தளம் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ் லிமிடெட் நிறுவனம். இது முதன்மையாக இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின் கப்பல்களைக் கட்டுகிறது. இந்நிறுவனத்தில் மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பட்டயம், பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 2025/04(S)

பணி: Supervisor (Grade - S-1, S-2, S-3)

காலியிடங்கள்: 27

தகுதி: Supervisor கிரேடு எஸ்-3 பணிக்கு ஏதாவதொரு பட்டப்படிப்புடன் ஏற்றுமதி மற்றுமதி பிரிவில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Supervisor Gகிரேடு எஸ்-2 பணிக்கு பிசிஏ படிப்புடன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பணியில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண் Supervisor கிரேடு எஸ்-1 பணிக்கு எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ என்ஜினியரிங் அல்லது மனிதவளம், அலுவலக மேலாண்மை பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Design Assistant (Grade S-2, S-1)

காலியிடங்கள்: 17

தகுதி: சிவில், ஐடி, சிஎஸ்இ, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் ஆகிய ஏதாவதொன்றில் டிப்ளமோ என்ஜினியரிங் படிப்பை முடித்து கிரேடு எஸ்-2 பணிக்கு 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கிரேடு எஸ்-1 பணிக்கு பணி அனுபவம் தேவையில்லை.

பணி: Engine Technician

காலியிடங்கள்: 2

தகுதி: எலக்ட்ரிக்கல், இசிஇ பிரிவில் டிப்ளமோ என்ஜினியரிங் படிப்பை முடித்திருக்கவேண்டும்.

வயது வரம்பு: 1.5.2025 தேதியின்படி கணக்கிடப்படும். எஸ்-3 கிரேடு 36-க்குள்ளும், எஸ்-2 கிரேடு 32-க்குள்ளும், கிரேடு எஸ்-1 28-க்குள்ளும் இருக்க வேண்டும்.

ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படியும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு தோராயமாக ஜூலை மாதம் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 472 மட்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.grse.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.6.2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com