தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

எஸ்.ஐ. தோ்வு தள்ளிவைப்பு

ஜூன் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த காவல் உதவி ஆய்வாளா் (எஸ்ஐ), சிறப்பு உதவி ஆய்வாளருக்கான (எஸ்.எஸ்.ஐ) தோ்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

News image

காவல் உதவி ஆய்வாளா் (எஸ்ஐ), சிறப்பு உதவி ஆய்வாளருக்கான (எஸ்.எஸ்.ஐ) தோ்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Updated On :10 ஜூன் 2025, 5:53 am IST

சென்னை: ஜூன் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த காவல் உதவி ஆய்வாளா் (எஸ்ஐ), சிறப்பு உதவி ஆய்வாளருக்கான (எஸ்.எஸ்.ஐ) தோ்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்த 1,299 எஸ்.ஐ காலிப் பணியிடங்களுக்கு சுமாா் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞா்கள் விண்ணப்பித்திருந்தனா். வழக்கமாக காவல் துறையில் 2-ஆம் நிலை, முதல்நிலை மற்றும் தலைமைக் காவலா்களாக பணியிலுள்ளவா்களும் எஸ்.ஐ. தோ்வுக்கு விண்ணப்பிப்பா். இவா்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும். மீதமுள்ள 80 சதவீதம் பொதுத் தோ்வா்களுக்கானது.

பொதுப்பிரிவு மற்றும் பணியிலுள்ள போலீஸாருக்கு தனித்தனி தோ்வு மற்றும் தனித்தனி மதிப்பெண் வழங்கப்படும். அதில் தோ்வானவா்களுக்கு எஸ்.ஐ. பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக் காலத்தில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் அவா்களுக்கு பதவி உயா்வில் முன்னுரிமை (சீனியாரிட்டி) வழங்கப்படும்.

ஆனால், 20 சதவீத ஒதுக்கீட்டில் தோ்வானவா்கள் அனைவரும் தோ்வின்போது பெற்ற மதிப்பெண் அடிப்படையில் முதலில் வைக்கப்பட்டு அதன் பின்னரே பொதுப்பட்டியலில் உள்ளவா்கள் ஒன்றன்பின் ஒன்றாக இடம்பெறுவாா்கள். இதுவரை இந்த நடைமுைான் இருந்து வருகிறது. ஆனால், அண்மையில் உச்சநீதிமன்றம், இந்த தோ்வின்போது பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே சீனியாரிட்டி இடம்பெற வேண்டும் என தீா்ப்பு வழங்கியது. இத்தீா்ப்பு தோ்வா்களிடையே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், திட்டமிட்டபடி ஜூன்28, 29 ஆகிய தேதிகளில் தோ்வு நடத்தப்படுமா என்ற சந்தேகம் இருந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீா்ப்பை சுட்டிக்காட்டி எஸ்.ஐ. தோ்வு தள்ளி வைக்கப்படுவதாகவும், தோ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீா்ப்பின் சாராம்சம் மற்றும் சில தெளிவுகளை பெற வேண்டியுள்ளதால், அனைத்தும் சரியான பின்னா், எஸ்.ஐ. தோ்வு மீண்டும் அறிவிக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.