406 ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

இந்தியா ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளில் காலியாக உள்ள 406 அதிகாரி காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது
406 ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு:  யுபிஎஸ்சி அறிவிப்பு
Published on
Updated on
1 min read

இந்தியா ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளில் காலியாக உள்ள 406 அதிகாரி காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத ஆண், பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு எண். 10 / 2025 -NDA-II

தேர்வின் பெயர்: National Defense Academy & Naval Academy Examination - I (2025)

காலியிடங்கள்: 406

1. Army - 208

2. Navy - 42

3. Air Force - 120

4. Navel Academy - 36

வயது வரம்பு: 1.1.2007-க்கும் 1.1.2010-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: National Defense Academy பணிக்கு ஏதாவதொரு பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . Navy Airforce பணிக்கு Physics மற்றும் Mathematics-ஐ ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் எஸ்எஸ்பி நடத்தும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வில் Mathematics General Ability Test பாடப்பிரிவுகளிலிருந்து கொள்குறி வகையில் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் மதிப் பெண்கள் குறைக்கப்படும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 14.09.2025

இடங்கள்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், புதுச்சேரி.

எழுத்துத்தேர்வு முடிவுகள் மத்திய பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

எஸ்எஸ்பி நேர்முகத்தேர்வு நடைபெறும் மாதம்: ஜனவரி - 2026.

எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 3 ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது உதவித்தொகையாக மாதம் ரூ.56,100 வழங்கப்படும். பின்னர் அதிகாரிப் பணியுடன் மாதம் ரூ.56,100 - 1,77,500 சம்பளமாக வழங்கப்படும்.

பயிற்சி ஆரம்பமாகும் மாதம்: 2026

விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய உடற்தகுதி, மருத்துவத் தகுதி மற்றும் எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட டம் பற்றிய முழுவிபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.upsconline.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண் டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.06.2025

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com