உரத்தொழிற்சாலையில் வேலை வேண்டுமா?: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

மும்பையில் உள்ள ராஷ்ரிய கெமிக்கல்ஸ் மற்றும் உரத்தொழிற்சாலை நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மும்பை ராஷ்ரிய கெமிக்கல்ஸ் மற்றும் உரத்தொழிற்சாலை
மும்பை ராஷ்ரிய கெமிக்கல்ஸ் மற்றும் உரத்தொழிற்சாலை
Published on
Updated on
1 min read

மும்பையில் உள்ள ராஷ்ரிய கெமிக்கல்ஸ் மற்றும் உரத்தொழிற்சாலை நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். 05022025

பணி: Officer (Finance)

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.40,0000- 1,40,000.

வயதுவரம்பு: 34-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சிஏ, சிஎம்ஏ படிப்புடன் நிதியியல் பாடப் பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

பணி: Management Trainee

பிரிவு: Chemical

காலியிடங்கள்: 11

தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், கெமிக்கல் டெக்னாலஜி, பெட்ரோகெமிக்கல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Electrical

காலியிடங்கள்: 3

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Instrumentation

காலியிடங்கள்: 3

தகுதி: பொறியியல் துறையில் இன்ஸ்ட்ருமென்டேஷன்,இன்ஸ்ட்ருமென்டேஷன் & கண்ட்ரோல், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மென்டேஷன் ஆகிய ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Civil

காலியிடங்கள்: 5

பிரிவு: Mechanical

காலியிடங்கள்: 2

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Marketing

காலியிடங்கள்: 3

தகுதி பொறியியல் துறையில் ஏதாவதொரு பிஇ அல்லது பி.எஸ்சி (விவசாயம்) முடித்து சந்தையியல், விவசாய வணிக பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

பிரிவு: Safety

காலியிடம்: 1

பிரிவு: Boiler

காலியிடங்கள்: 5

பிரிவு: Material

காலியிடங்கள்: 19

தகுதி: Boiler, Safety, Material பிரிவுகளுக்கு விண்ணப்பிப்போர் கெமிக்கல், பெட்ரோ-கெமிக்கல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.2.2025 தேதியின்படி 27 க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு தலா 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித்தேர்வு, குழு விவாதம், செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வு சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களில் நடைபெறும். இதுகுறித்து மின்னஞ்சல், இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன்மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடை யாது.

விண்ணப்பிக்கும் முறை: www.rcfltd.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.6.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com