சென்னை துறைமுக ஆணையத்தில் பைலட் வேலை வேண்டுமா?

சென்னையில் உள்ள சென்னை துறைமுக ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள பைலட் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை துறைமுக ஆணையம்
சென்னை துறைமுக ஆணையம்
Published on
Updated on
1 min read

சென்னையில் உள்ள சென்னை துறைமுக ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள பைலட் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Pilot(Contract basis)

காலியிடங்கள்: 2

சம்பளம்: பயிற்சி விமானி (பயிற்சியின் போது)மாதம் ரூ.1,50,000,

தகுதி: மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறையால் வழங்கப்படும் வெளிநாட்டுக்குச் செல்லும் கப்பல் பைலட்-க்கான முதுகலைப் பட்டம்(எப்ஜி) அல்லது தகுதிச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமமான(சிஓசி) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 1 ஆண்டு பைலட்டாக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 55-க்குள் இருக்க வேண்டும். துறைமுக தலைமை மருத்துவ அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட உடல்நலன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: வெளிநாடுகளுக்குச் செல்லும் கப்பலில் மாலுமியாகபணியாற்றிய அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 6 மாதம் உதவித் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் பணி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.chennaiport.gov.in என்ற இணையதளத்தில் மேற் கண்ட வேலைவாய்ப்பு பற்றிய விபரம் மற்றும் விண்ணப்பப் படிவம் கொடுக்கப் பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வரும் 25 ஆம் தேதிக்கு முன்னரே வந்து சேறுமாறு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Deputy Conservator, Marine Department, Chennai Port Authority, Rajaji Salai, Chennai. Pin-600 001

நேர்முகத் தேர்வு நடைபெறும் கடைசி நாள்: 25.6.2025

நேர்முகத் தேர்வுக்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்பிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com